உலக செய்திகள்

ஐ.எஸ் அமைப்பின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் 150 பேர் ஆப்கான் படையிடம் சரம்….


ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரும், துணைத்தலைவர் மற்றும் 150க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்துள்ளதாக வட பகுதி இராணுவ தளபதி முகமது ஹனிப் ரெஸாயீ தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டு போரை பயன்படுத்தி ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் அங்கு கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதால், அவர்களுக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தது.

குறிப்பாக ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான ஜோஸ்ஜான் மாகாணத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல்கள் நடந்து வந்தது.

மற்றொரு பக்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளிடம் இருந்தும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அழுத்தம் வந்தது. இந்நிலையில் அங்கு 150க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்துள்ளனர்.

Related posts

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்..

wpengine

இந்திய பயணிகளுக்கு தற்காலிக தடை

wpengine

இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி

wpengine