உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள்



சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள் ஐபிஎல் தொடரில் இடம்பெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் பி.சி.சி.ஐ.-யின் புதிய தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையில் நேற்று(18) நடைபெற்றது.

இதில் சூதாட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளின் நிலைமை தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.

இதில் சென்னை, ராஜஸ்தான் அணிகளை ஐபிஎல் தொடரில் இருந்து நீக்க பி.சி.சி.ஐ விரும்பவில்லை என்றும், அதற்குப்பதில் புதிய இரண்டு அணிகள் 2016, 2017ல் கலந்து கொள்ளும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2018ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன் மொத்தம் 10 அணிகள் இடம்பெறும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

சர்வகட்சி மற்றும் மதத் தலைவர்கள் மாநாட்டிற்கு ஜனாதிபதி அழைப்பு…

wpengine

 வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

wpengine

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக சின்னையா நியமனம்..

wpengine