உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐந்து நிபந்தனைகளை முன்வைத்து ரவி இராஜினாமா…



சர்ச்சைக்குரிய இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு உள்ளாகியுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது தற்போதைய வெளிவிவகார அமைச்சுப் பதவியை இன்று(10) 5 நிபந்தனைகளை முன்வைத்து இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தான் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தனது அமைச்சின் காரியாலய ஊழியர்களை அவ்வாறே கலைத்துவிடாமல் வைத்திருத்தல், மத்திய வங்கி முறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் நிறைவு செய்தல் என்பனவும் அந்த ஐந்து நிபந்தனைகளில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதியதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் நேற்று(09) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

 

 

(rizmira)

Related posts

ராஜித உள்ளிட்ட 3 பேருக்கு பிணை

wpengine

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் வைத்தியசாலையில்…

wpengine

அவுஸ்திரேலியா – இலங்கை உடனான T-20 போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு…

wpengine