ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐக்கிய தேசிய கட்சியின் பார்வை கே.பி பக்கம் சாய்கிறது..



தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் கைது செய்யப்பட்டவருமான கே.பி என்று அறியப்படும் குமரன் பத்மநாதன் மீதான நடவடிக்கை குறித்து வெகுவிரைவில் தகவல்களை அம்பலப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சு நடத்தி விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி இந்த தகவல்களை வெளியிட தயாராவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

இதன்போது குமரன் பத்மநாதன் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கபீர் ஹாஷிம், பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி கே.பி தொடர்பில் அடுத்த கட்டநடவடிக்கை குறித்து தீர்மானம் எடுப்பதோடு தகவல்களையும் ஊடகங்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

 

-reeshmaa..

Related posts

கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்ற முதல் PreShoot [PHOTOS]

wpengine

வெலே சுதாவுடன் பணம் கைமாறலில் நடிகை உதயங்கி

wpengine

படங்களின் வசூலுக்கு அணைபோட்ட மழை

wpengine