உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இம்முறை வரலாற்று வெற்றி – கபீர் ஹாஷிம்



இம்முறை தேர்தல் ஐக்கிய தேசிய கட்சிக்கு போட்டியில்லை எனவும், கட்சியை சுற்றி பெரிய மக்கள் கூட்டம் இருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

மாவனல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி செயற்பாட்டாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படிக் கருத்தினை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆரம்பிக்கும் போதே எங்களால் கூற முடியும் ஐக்கிய தேசிய கட்சி நிச்சியமாக பெரிய அளவிலான வெற்றியை பெற்றுக்கொள்ளும்.

நாட்டின் சிறந்த தலைமைத்துவம் என்ன என்பதனை இன்று வரையில் மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதனால் கட்சியை சுற்றி பெரிய அளவிலான மக்கள் இணைந்துள்ளனர்.

ஜனாதிபதியின் உரையினை கேட்டிருந்தால் தெரிந்திருக்கும் எங்கள் அரசாங்கத்திற்கு எதிராக தீட்டப்பட்ட சூழ்ச்சிகள் குறித்து என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(riz)

 

Related posts

கிழக்குக்கான புகையிரத இணைப்பை அதிகரித்தல், சேவையை நவீனப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்..!

wpengine

மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும்…

wpengine

அவுஸ்திரேலியா – இலங்கை உடனான T-20 போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு…

wpengine