கேளிக்கை

ஏ.ஆர்.ரஹ்மானை ஈர்த்த காந்தக்குரல் பேபி – சினிமா பாடகராகும் வாய்ப்பு…


தனது குரலின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை கவர்ந்த தெலுங்கு பெண்ணுக்கு படத்தில் பாட வாய்ப்பு அளிப்பதாக தெலுங்கு இசையமைப்பாளர் சலூரி அறிவித்துள்ளார்.

‌ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1994-ம் வெளியான ‘காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என்னவளே’ பாடலின் தெலுங்கு வடிவம் ‘ஓ செலியா’. இந்தப் பாடலை ஒரு கிராமத்துப் பெண் பாடும் வீடியோ சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலானது.

யு டியூபில் பதிவேற்றப்பட்ட 10 மணி நேரங்களில் 7 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. இந்த வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து ‘இவர் யாரென்று தெரியவில்லை. அருமையான குரல்’ என்று பாராட்டினார்.

அந்தப் பெண்ணின் பெயர் பேபி என்றும், அவர் ஆந்திர மாநிலம் வடிசலேரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பேபியின் அற்புதக் குரலால் ஈர்க்கப்பட்ட தெலுங்கு இசையமைப்பாளர் சலூரி கோட்டீஸ்வர ராவ் அவருக்கு தனது இசையில் பாட வாய்ப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தான் அந்த பெண்மணிக்கு வாய்ப்பு கிடைக்க காரணம் என்பதால் அவரது ரசிகர்கள் இந்த செய்தியை பகிர்ந்து ரஹ்மானை பாராட்டி வருகிறார்கள்

Related posts

தளபதிக்கே சவால் விட்ட மகேஷ் பாபு – செய்து காட்டினார் விஜய்

wpengine

மணிரத்னம் படத்தில் புதிய அவதாரம் எடுக்கும் ஜோதிகா…

wpengine

கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் ஜோடியாக சுற்றும் தீபிகா – ரன்வீர்சிங்…

wpengine