கேளிக்கை

ஏ.ஆர்.ரஹ்மானின் இடத்தை பிடிக்கும் அனிருத்?



ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.

‘2.0’ படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது ‘2.0’ இறுதிகட்ட பணிகளில் தீவிரம்காட்டும் ஷங்கர், அதனைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தின் முதற்கட்ட பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார்.

இதனிடையே, ‘இந்தியன் 2’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டாலும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.

முன்னதாக ‘ரெமோ’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஷங்கர் “விரைவில் அனிருத்தோடு பணிபுரிவேன்” என்று தெரிவித்திருந்தார். அப்போதே ‘2.0’வில் இசையமைப்பாளராக அனிருத் இருப்பார் என்று தகவல் வெளியானது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார். ஷங்கர் – அனிருத் இணை முதன் முறையாக ‘இந்தியன் 2’வில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரலில் ‘2.0’ திரைக்கு வந்தவுடன் ‘இந்தியன் 2’ படத்தின் நடிகர் – நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

Related posts

‘சீறும் புலிகள்’ எனும் தலைப்பில் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது…

wpengine

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தின நிகழ்வுகளில் யொஹானி

wpengine

அர்ஜுன் மகளுக்கும் கொரோனா

wpengine