உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

எவன்காட் தலைவர் நிஷங்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை



எவன்காட் தலைவர் நிஷங்க சேனாதிபதியை நாளை(16) பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து சாட்சியமளிக்கவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறாயினும் முன்னதாக மூன்று முறைகள் நிஷங்க சேனாதிபதிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அவர் வெளிநாடு சென்றிருந்ததால் அவரால் ஆணைக்குழுவில் ஆஜராக முடியவில்லை.

இதன்படி மீண்டும் அவரை நாளை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஹோமாகம – தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்க நிர்மாணப் பணிகளின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசடி தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இன்று முதல் வட்டி வீதங்கள் அதிகரிப்பு…

wpengine

அதிவேக வீதி பேருந்து சேவை இன்று முதல்

wpengine

தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி

wpengine