உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கையை கவனிக்காது இருப்பது தேர்தலினை பிற்போடுவதற்காகவா..?



எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கையை கவனிக்காது விட்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடத் தயாராகி வருவதாக அரசியல் கட்சிகள் சில குற்றம் சுமத்தியுள்ளன.

குறித்த குழுவின் அறிக்கை தயாரிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அதனை பொறுப்பேற்பதைத் தவிர்க்க அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் டி ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விரைவில் அந்த அறிக்கையை பெற்றுக் கொண்டு வர்த்தமானியில் வௌியிட வேண்டும் என, ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று காலை எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாடு செல்ல அனுமதி கோருகிறார் கம்மன்பில..

wpengine

இன்று(18) அதிகாலை ஏற்பட்ட வேன் விபத்தில் 10 பேர் மருத்துவமனையில்…

wpengine

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தோன்றி புதிய சர்ச்சை

wpengine