உள்நாட்டு செய்திகள்

எல்லை நிர்ணயவிவாதத்திற்கு பின்னர் தேர்தல் குறித்து தீர்மானம் எட்டப்படும் …


மாகாண சபை தேர்தலை புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா நடாத்துவது என்பது தொடர்பில் புதிய முறையின் கீழான எல்லை நிர்ணயம் குறித்த விவாதத்திற்கு பின்னர் தீர்மானம் ஒன்றினை எட்ட பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று(09) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணய அறிக்கையானது கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அது குறித்த விவாதத்திற்கு பின்னர் தீர்மானம் ஒன்றுக்கு வர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோர் தலைமையில் நேற்று(09) கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

R.Rishma

Related posts

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ விவாதம் அடுத்த வாரம்

Azeem Kilabdeen

பல மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்…

wpengine

மறு அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

wpengine