விளையாட்டு

எலி வலையில் சிக்கிய டில்ஷான்



முன்னாள் கிரிக்கெட் கெப்டன் மற்றும் நட்சத்திர வீரர் டில்ஷான் தனது முதல் திருமணத்தின் போது கிடைத்த குழந்தையின் ஆயுள் காப்புறுதிக்காக 3 வருடங்கள் வழங்க வேண்டிய பணத்தொகை மற்றும் மாதாந்த பராமரிப்புத் தொகையினை வழங்கத் தவறியமைக்கான வழக்கில் போலியான முகவரியினை குறிப்பிட்டுள்ளதாக நேற்று (10) கொழும்பு – 09 நீதவான் நீதிமன்றில் வெளிச்சமாகியது.

நீதிமன்ற நிதிநிலை அழைப்பானையினை அனுப்பிய போதே இப்போலி முகவரி சிக்கியதாக கூறப்படுகின்றது.

மேலும், டில்ஷான் மாதாந்த பராமரிப்பு பணமாக 20,000 மற்றும்  03 ஆண்டு ஆயுள் காப்பீடு கட்டணம் வழங்கத்தவரியுள்ளார்.

இவ்வழக்கானது தில்ஷானின் முன்னாள் மனைவியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வழக்கானது  ஜூலை – 9ஆம் திகதி மீள் விசாரணைக்காக தள்ளப்பட்டுள்ளது.

Related posts

தனது முதல் போட்டியிலேயே சாதனை படைத்த லக்ஷான்

wpengine

இலங்கை அணியானது 259 ஓட்டங்களால் பின்னடைவில்…

wpengine

இந்நாட்டின் கிரிக்கட் ஊழல், மோசடி தொடர்பிலான அறிக்கையினை வழங்க ஐசிசி 02 வாரகால அவகாசம்…

wpengine