உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்…



எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருவளை தொடக்கம் மன்னார் வரையான மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எரிபொருக்கான மானியம் வழங்கப்படுதாக அரசு தெரிவித்திருந்த போதும் அது பயனற்ற ஒரு விடயம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஒரே முறையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் மீனவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் நகரின் பல பகுதிகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் சிலாபம் மீன் விற்பனை நிலையமும் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

படகுகள் கடலுக்கு செல்லாமல் தரித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

wpengine

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் மீளவும் ஆரம்பம்..

wpengine

டெங்கு நோயினால் 4000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு…

wpengine