ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எரிபொருள் விலைச் சூத்திரம் மே 01ம் திகதி முதல் அமுலுக்கு… – எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு…



உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த விலைச் சூத்திரம் மே 01ம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வர அரசு தீர்மானித்துள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின், எரிபொருள் விலையை தீர்மானிக்கும் விலை சூத்திரம் எதிர்வரும் இரு வார காலப்பகுதிக்குள் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, எரிபொருள் விலைகளிலும் மாற்றம் நிகழ வாய்ப்புக்கள் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தில் பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 14 -16 ரூபா வரையிலும், டீசல் லீற்றர் ஒன்றுக்கு 6 – 9 ரூபா வரையிலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றுக்கு 48 ரூபாவும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நாளொன்றுக்கு  38 மில்லியன் ரூபா நட்டம் இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படுவதாகவும் நிதியமைச்சு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

####

Related posts

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையே சந்திப்பு..

wpengine

பசிலுக்கு அடித்தது அதிஷ்டம்

wpengine

ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய அதிகாரிகள் பலரை நீக்க நடவடிக்கை

wpengine