உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய இராணுவம்


கனியவள ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தத்தில்  ஈடுபட்டுள்ளதால், நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால், நேற்று முன்தினம் இரவு முதல் பிரதான நகரங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சாரதிகளும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
இந்த நிலையில், எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக கருதி எரிபொருள் விநியோகம்  இராணுவத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ள எரிபொருள் விநியோகத்தை இன்று காலை முதல் இராணுவம் மேற்கொள்ளும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி சிறிசேன பொதுமக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை கவனத்தில் கொண்டு உடனடியாக வேலைக்கு திரும்பும்படி கனியவள ஊளியர்களிடம் வேண்டுகோள்    விடுத்துள்ளார்.

Related posts

தனியார் பஸ் உரிமையாளர்களின் தீர்மானம் இன்று

Azeem Kilabdeen

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..

wpengine

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை – சபாநாயகர்

wpengine