உள்நாட்டு செய்திகள்

எரிபொருளை தாங்கிய நெவஸ்கா லேடி இலங்கையை வந்தடைந்தது…



40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருளை தாங்கிய நெவஸ்கா லேடி என்ற கப்பல் நேற்று(08) இரவு முத்துராஜவளையை வந்தடைந்தது.

குறித்த கப்பலில் உள்ள எரிபொருளின் மாதிரி, தரப்பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் என கனியவள அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று(09) மதியத்திற்குள் விநியோக பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 24 மணி நேர எரிபொருள் விநியோக திட்டம் ஒன்றை முன்கொண்டுவரவிருப்பதாகவும், எரிபொருள் தேவை முழுமைப்படுத்தப்படும் வரையில் இந்த நடவடிக்கை இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கிளைபோசேட் குறித்து தீர்மானம் எடுக்க அமைச்சரவையினால் குழு…

wpengine

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தேர்தல் இன்று

wpengine

பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்…

wpengine