உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிசக்தி அமைச்சை ஒப்படைக்க தயார்: அமைச்சர் காஞ்சன விஜேசேகர



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தனது அமைச்சினை சிறப்பாகச் செய்யக்கூடிய ஒருவரிடம் ஒப்படைக்க தான் தயாராக இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று தனது அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை கடன் செலுத்தாத நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் எரிபொருள் விநியோகம் மிகவும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய செல்லும் போது பல சப்ளையர்கள் வெளிநாட்டு வங்கியொன்றில் சான்றிதழ் கேட்பதாகவும் இலங்கைக்கான எரிபொருளை வழங்குவதற்கான டெண்டர்களுக்கு எந்தவொரு விநியோகஸ்தர்களும் முன்வராத நிலை காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தனது அமைச்சினை சிறப்பாகச் செய்யக்கூடிய ஒருவரிடம் தான் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொவிட் – 19 : தொற்றார்கள் எண்ணிக்கை 244 ஆக உயர்வு

wpengine

வாக்காளர் அட்டை விநியோகம் இடைநிறுத்தம்

wpengine

லசந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் – அறிந்தால் பொலிஸாருக்கு தெரிவிக்கவும்

wpengine