ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எம்முள் பிரிவினைகள் இல்லை – 2020 ஜனாதிபதி வேட்பாளர் நானே – மஹிந்த…



2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே களமிறக்கப்படுவார் என பரவலாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், இது குறித்து ஊடகமொன்று முன்னாள் ஜனாதிபதியிடம் வினவியபோது,

“.. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை பொதுஜன பெரமுனவும், கூட்டு எதிர்க்கட்சியும் இணைந்து ஒரு முடிவை எடுக்கும். இதற்கு அவசரப்படத் தேவையில்லை.

ராஜபக்ஷ சகோதரர்களுக்கு இடையே எவ்வித பிரச்சினைகளும் இல்லை. ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கு அவசரப்படுபவர்களே இவ்வாறான பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். ஆனால் எமக்குள் எந்த சண்டைகளும் இல்லை.

நான் 03வது முறையாகவும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும் என சில சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது பற்றி உயர் நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும். அந்த வகையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நானே போட்டியிடலாம்..” என மஹிந்த தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

14 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!

wpengine

கோடிக்கணக்கான சொத்துக்களை நாட்டுக்காக கொடுத்த சிறந்த அரசியல்வாதி

wpengine

ஒலிம்பிக்கை தாக்கியது கொரோனா; வீரர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி

wpengine