உள்நாட்டு செய்திகள்

எம்பிலிபிடிய விவகாரம் – சடலம் தோண்டியெடுப்பது குறித்து நாளை தீர்ப்பு



எம்பிலிபிடிய பகுதியில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில், உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலத்தை தோண்டி எடுப்பதா இல்லையா என்பது குறித்த பதில் நாளை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, உயிரிழந்தவரின் சடலத்தை தோண்டி எடுத்து மீளவும் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும், விடயங்களை ஆராய்ந்த எம்பிலிபிடிய மேலதிக நீதவான் பிரசன்ன பிரணாந்து, இது தொடர்பிலான தீர்பை நாளை வழங்குவதாக குறிப்பிட்டார்.

இன்னும், சந்தேகத்தின் பெயரில் கைதான முன்னாள் ஏ.எஸ்.பி தர்மரட்னவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

2019ம் ஆண்டு இறுதியில் செலவுத் திட்டத்தை அரசு முன்வைக்காதிருக்க தீர்மானம்

wpengine

பல்கலைக்கழகங்களுக்கு 11 சுகாதார நிபந்தனைகள்

wpengine