உள்நாட்டு செய்திகள்

எமில் ரஞ்சன் மற்றும் நியோமல் ரங்கஜீவ ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்..


முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசாரணைப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோருக்கு எதிர்வரும் 18ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோர் முறையே கடந்த மார்ச் 28, 29 ஆம் திகதிகளில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்தோடு 40 பேர் காயமடைந்தமையும் நினைவுகூறத்தக்கது.

Related posts

நீரினை வீண்விரயம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

wpengine

கட்டுப்பாட்டு விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய முடியாது!

wpengine

அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு விடுத்த கோரிக்கை தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடுவேன் – ஹகீம்

wpengine