உள்நாட்டு செய்திகள்

எமில் ரஞ்சன் மற்றும் நியோமல் ரங்கஜீவ மீண்டும் விளக்கமறியலில்…



முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோரை,
எதிர்வரும் ஜூன் மாதம் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக  நீதவான் நீதிமன்றம் இன்று22) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் சம்பந்தமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது, சம்பவம் குறித்து தொடர் விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக இரகசியப் பொலிசார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்நிலையில் அடுத்த வழக்குத் தவணையின் போது விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் அதுவரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related posts

Batticaloa Campus தொடர்பான விசாரணை அறிக்கை ஜூன் மாத முற்பகுதியில் பாராளுமன்றிற்கு…

wpengine

நாட்டை முழுமையாக முடக்க தீரமானம் இல்லை

wpengine

UPDATE – சிறுமி மீது கனரக வாகனம் மோதுண்டதில் சிறுமி பலி.. போக்குவரத்து வழமைக்கு..

wpengine