ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எப்போதோ விடைபெற்றாயிற்று ????



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எட்டாவது பாராளுமன்றின் முன்னாள் சபாநாயகர் மற்றும் அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்புச் சபை நேற்றைய தினம்(03) கூடியது.

சபாநாயகர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற குறித்த இந்த கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மஹிந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க ஆகியோர் உட்பட அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் 6 பேர் இதில் கலந்து கொண்டனர்.

எனினும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இதில் கலந்து கொள்ளவேண்டி இருப்பினும் அவர் சமூகமளிக்கவில்லை.

கரு ஜயசூரியவின் இறுதி அரசியலமைப்பு சபை கலந்துரையாடலாக இது அமையப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தீபிகா உடகம தனது பதவியை எதிர்வரும் செப்டெம்பர் முதல் அமுலாகும் வகையில் இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அரசியலமைப்புச் சபையில் கையளித்தமையானது அனைவரதும் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

நியூஸ்லாந்து அணி பயணித்த பேருந்து: மலைப்பகுதியில் நடந்தது என்ன? (video)

wpengine

நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக ட்ரம்பின் மார்பளவு சிலை… (PHOTOS)

wpengine

நிர்வாணமான பிரபல விளையாட்டு வீரர்கள்

wpengine