உள்நாட்டு செய்திகள்

எப்பாவளை 04 பேர் கொலை – இளைஞனுக்கு மரண தண்டனை விதிப்பு..



அனுராதபுரம் – எப்பாவளை, சந்தரெஸ்கம பிரதேசத்தில் நான்கு பேரை கொலை செய்த ஒருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று(21) தீர்ப்பளித்துள்ளது.

2010ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மகள் மற்றும் மகனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக இனங் காணப்பட்ட நபருக்கு நீதிபதி மஞ்சுள திலக்கரத்ன இன்று(21) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாளர்கள் எவரும் இருக்கவில்லை. தடயங்களின் அடிப்படை குற்றவாளி கொலைகளை செய்திருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எப்பாவளை, எந்தகல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இளைஞனுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

மீளவும் திஸ்ஸ ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைகிறார்..?

wpengine

இலஞ்ச மற்றும் ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி…

wpengine

கட்டார் ரியால் மாற்று விவகாரத்தினை மத்திய வங்கி மறுப்பு..

wpengine