ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எனது ஆதரவு சஜித்திற்கு; சந்திரிக்காவை கண்டிக்கும் வகையில் ராஜபக்ஸ கருத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் செயற்பாட்டினை கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.

சந்திரிக்கா முன்னரை விடவும் தற்போதைய நிலையில் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். சரியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதாக சந்திரிக்கா அறிவித்துள்ளார். இது தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திட்டார்.

கோட்டாபய ஜனாதிபதியானால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முழுமை அழிவடைந்துவிடும் என்றும், கட்சியை பாதுகாக்கும் நோக்கில் சஜித்துடன் இணைந்து கொண்டதாக சந்திரிக்கா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவினால் இவ்வாறான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குசல் – சந்திமால் -அகில நியூசிலாந்து செல்வதா இல்லையா என கிரிக்கெட் நிறுவனம் அறிவிப்பு..

wpengine

மைத்திரி, ரணில் பங்கேற்ற நிகழ்வில் ‘அதிமேதகு ஜனாதிபதியானார்’ மஹிந்த!

wpengine

கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை தடை செய்வேன் – பி.ஹரிசன்

wpengine