கேளிக்கை

எனக்கு முக்கியத்துவம் இல்லாத படத்தில் நடிக்க மாட்டேன் பிரபல நடிகை ஆவேசம்…



தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி என்ற இடத்தை பிடிக்க முயற்சி செய்து வரும் ரகுல் ப்ரீத்திசிங், அவருக்கு முக்கியத்துவம் இல்லாத படத்தில் நடிக்க மாட்டேன் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.

தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தியுடன் நடித்த ரகுல் பிரீத்திசிங், அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் 62-வது படத்திலும் ரகுல் பிரீத்திசிங் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு கீர்த்தி சுரேசுக்கு கிடைத்தது.

தற்போது இந்தியில் ‘அய்யார்’ படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து அஜய் தேவ்கனுடன் ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், புதிய படங்களில் ரகுல் பிரீத்திசிங் 2-வது நாயகியாக நடிக்கிறார் என்று செய்தி வெளியானது. இதற்கு பதில் அளித்த ரகுல் பிரீத்திசிங்…

“நான் தற்போது நடிக்கும் படங்களில் முதன்மை நாயகியாகத் தான் நடித்து வருகிறேன். நான் நடிக்கும் படங்களில் வேறு நாயகிகளும் நடிக்கிறார்கள். என்றாலும், அவர்களை காரணம் காட்டி எனது பாத்திரத்தை எந்த இயக்குனரும் ‘டம்மி’ ஆக்கவில்லை. 2-வது நாயகியாகவும் நடிக்கவில்லை.

எந்த படத்திலாவது, மற்ற நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டு என்னை 2-வது நாயகி ஆக்கினால், நான் அந்த படத்தில் இருந்து வெளியேறி விடுவேன்” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Related posts

Africa Photographer of the year 2018 இறுதி 20 புகைப்படங்களில் லக்ஷிதவின் Swinging time…

wpengine

ஏமி ஜாக்சன் மீண்டும் புரளியில்… (PHOTOS)

wpengine

மார்வெல் OTT தளத்தில்

wpengine