உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 6ஆம் திகதி முதல் பலாவி ரயில் நிலையம் வரை விசேட ரயில் சேவை



எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை பலாவி ரயில் நிலையம்வரை விசேட ரயில் சேவை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சரகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்

ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி பிற்பகல் 2.10 மணிக்கு மொரட்டுவையிலிருந்து புறப்படும் ரயில், மாலை 6.55 மணிக்கு பலாவி ரயில் நிலையத்தை சென்றடையும்.

07ஆம் திகதி பலாவி ரயில் நிலையத்திலிருந்த  பிற்பகல் 4.45 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 9 மணிக்கு மொரட்டுவை ரயில் நிலையத்தை வந்தடையும்.

6ஆம் திகதி முதல் 8ஆம் திகதிவரை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் ரயில்கள், பிற்பகல் 1.05 மணியளவில் பலாவி ரயில் நிலையத்தைச் சென்றடையும். தலவில புனித அன்னம்மாள் தேவாலய விழாவை முன்னிட்டு இந்த விசேட ரயில் சேவை நடைபெறவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுதலை…

wpengine

நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி…

wpengine

இங்கிலாந்துடன் சமநிலையாக இருக்க இலங்கைக்கு வரம்…

wpengine