உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம்…



எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை காரணமாக விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் மற்றும் டீசல் நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர் விஜித்தமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் இன்று(15) தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் 500 கோடி ரூபாவை செலவிடுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளியிணைப்பு மோட்டார் படகுகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரணத்திற்காக 35 கோடி ரூபா செலவிடப்படும் என்றும் பைபர் கிளாஸ் படகுகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்க 337 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரணத்திற்காக 115 கோடி ரூபா செலவு செய்யப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர் விஜித்தமுனி சொய்ஸா மேலும் தெரிவித்தார்.

Related posts

யாழ் பல்கலைக்கழக மோதல் விவகாரம் – வழக்குகளை வாபஸ்பெற முடிவு.

wpengine

மலையகத்தில் நீர் மட்டம் அதிகரிப்பு

wpengine

2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும் – பிரதமர்.

wpengine