உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கடும் வெப்பம்…



(FASTNEWS|COLOMBO) சூரியன், இன்று(05) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேரடியாக உச்சங் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று(05) நண்பகல் 12.12 அளவில் திக்வெல்ல, கெகனதுர, கொடவில மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக சூரியன் உச்சங் கொடுக்கவுள்ளது.

இதேவேளை, வடமேல் மாகாணத்திலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, ஹம்பாந்தொட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்றையதினம் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை..

wpengine

இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலை..

wpengine

சமநிலையில் நிறைவுக்கு வந்த இலங்கை – இங்கிலாந்து தொடர்.. (VIDEO)

wpengine