உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 1௦ ஆண்டுகளுக்கு ஐ.தே.கட்சியே நாட்டை ஆளும் – தயா



எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி உருவாகும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் நாட்டை அடுத்து 10 வருடங்களுக்கு ஆட்சி செய்யும் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை தான் ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை தேர்தலுக்கு பின்னர் அடுத்த வருடம் மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வற்காக மாத்திரமல்லாது சமூக சீர்த்திருத்தங்களுக்காகவும் நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்படும் எனவும் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை தமண பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் நேற்று நடந்த சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

(riz)

 

Related posts

நிலக்கரி கப்பல்களுக்கு பணம் செலுத்த மீண்டும் சிக்கல்..!

wpengine

சபுகஸ்கந்த பணிகள் மீண்டும் ஆரம்பம்

News Editor

கராப்பிட்டிய வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள் பற்றாக்குறை..!

wpengine