உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்வரும் 05,06ம் திகதிகளில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படமாட்டாது…


நாளை(05) மற்றும் நாளை மறுதினம்(06) பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிவித்தலில் கூட்டு எதிர்க் கட்சியின் நாளைய ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக எந்தவித அறிவித்தலையும் வழங்க வில்லையென கூறப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க் கட்சியினரின் நாளைய ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்றத்தை சுற்றிவளைப்பதாக சில பராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இதனைத் தவிர்ப்பதற்கே நாளையும், நாளை மறுதினமும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளதென தவறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.

இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை எனவும் சபாநாயகர் அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.

Related posts

ஓய்வூதிய கொடுப்பனவு சட்டமூலம் மீளவும் திருத்தத்திற்கு..

wpengine

இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர்கள் திடீரென உயிரிழப்பு – சுகாதார அமைச்சு அதிரடி உத்தரவு..

wpengine

எந்தவொரு கட்சியுடனும் உடன்பாட்டுக்கு வரவில்லை…

wpengine