உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 01ம் திகதி முதல் மக்கள் மீது பல புதிய வரி அமுல்படுத்தப்படும்…



ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இதுவரை காலமும் இல்லாத வகையில் பல்வேறு துறைகளுகளுக்கும் வரி அறிவடப்படும் புதிய ஆண்டு உதயமாகும் என்று கூட்டு எதிரக்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

நேற்று(27) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து காணி ஒன்றின் உரிமை மாற்றம் செய்யும் போது அல்லது மற்றொருவருக்கு விற்பனை செய்யும் போது 10 % வரி செலுத்த வேண்டும்.

அதேவேளை, மாடி வீடுகளை கொள்வனவு செய்யும் போது நூற்றுக்கு 15% வெட் வரி செலுத்த வேண்டும். இதுபோன்ற பல வரிகளை ஏப்ரல் 01ம் திகதியிலிருந்து செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், சித்திரைப் புத்தாண்டு நிறைவடைந்த உடனேயே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் பெற்றோல் விலையை அதிகரிக்கும் என்றும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

Related posts

வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தி மஸ்தான்

wpengine

UPDATE: ரிஷாத் மற்றும் ரியாஜ் கைது

wpengine

மத்திய வங்கி புதிய பிரதி ஆளுநர் நியமனம்..

wpengine