உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலானது தற்போதைய முறையில் நடத்தப்படும் – அமைச்சரவைத் தீர்மானம்



எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போதைய முறையில் நடத்தப்படும் என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20 வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றி அதன் பின்னர், பழைய முறையின் கீழ் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இது குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிறுவப்படும் நாடாளுமன்றின் பதவிக் காலம் பூர்த்தியானதன் பின்னர் நடைபெறும் பொதுத் தேர்தல், புதிய முறையில் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

20ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் மற்றும் புதிய தேர்தல் முறைமை குறித்தும் அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நடைமுறையில் உள்ள விருப்புத் தெரிவு முறையில் தேர்தல் நடத்தப்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.

Related posts

அனுருந்த பொல்கம்பொலவிற்கு பிணை…

wpengine

மனு நிராகரிப்பு

wpengine

நிரூபமா ராஜபக்ஷவுக்கு FCID அழைப்பாணை

wpengine

7 comments

shreen Jun 19, 2015 at 3:40 pm

20ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் மற்றும் புதிய தேர்தல் முறைமை குறித்தும் அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது.

faseen Jun 19, 2015 at 3:41 pm

எவ்வாராயினும் மக்களுக்கு நன்மை கிடத்தால் சரி

Harshan Jun 19, 2015 at 3:43 pm

20யில் சிறு பான்மையினருக்கு அதிக நன்மை உள்ளதாம்

Harshan Jun 19, 2015 at 3:45 pm

இரட்டை வாக்குறிமை வந்தால் இன்னும் பராளுமண்றத்தின் சிறுபான்மை ஆசனம் அத்கரிக்கும்

Musthaq Jun 19, 2015 at 3:49 pm

இரட்டை வாக்குறிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டல் சரி

rizwan Jun 19, 2015 at 3:52 pm

அது நடந்தாளும் சிறுபானமையினரின் உரிமகள் காப்பாற்றப்பட்டல் சரி

rizwan Jun 19, 2015 at 3:57 pm

நல்லாட்சியில் நல்லது நடக்கும்

Comments are closed.