Uncategorized

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சி வெற்றி பெறுவது உறுதியாகும்



தமிழர்களும்,சிங்களவர்களும்,முஸ்லிம்களும் ஒன்றாக வாழக் கூடிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சி வெற்றி பெறுவது உறுதியாகும் என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளர் அமைச்சர் றிசாத் பதியுதீன்,பிரதமர் ரணில் விக்ரமசிங் பிரதமராகுவது உறுதியாகியுள்ள நிலையில் எதிர்காலத்தில் இம்மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.
இன்று வவுனியா வெலிஒய சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனக புர,ஹெலம்பவெவ பகுதி மக்களுடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு கூறினார்.


யுத்த காலத்திலும் அதனது பிற்பட்ட காலத்திலும் அபிவிருத்திகள் என்று கொண்டுவந்தது நாம் தான்.இன்று சிலர் வருகின்றார்கள் வாக்கு கேட்டு நீங்கள் அவர்கள் எவ்வாறு வாக்களிப்பது,இங்கு இப்போது வந்துவிட்டு சென்றால் இனி 5 வருடங்களின் பின்னர்தான் வருவார்கள்,அரச தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதில் இந்த பிரதேச மக்கள் பெரும் சிரமங்கரைள எதிர் கொள்வதை நானறிவேன்,அதனையும் எதிர்காலத்தில் நிவர்த்த்திக்க நடவடிக்கையெடுப்பேன் என்றும் கூறினார்..

Related posts

பாலியல் உறவின்போது வாடிக்கையாளர் திடீரென இறப்பு – சத்திரசிகிச்சை மூலம் பிரிப்பு (VIDEO)

wpengine

சைபர் தாக்குதல் சம்பவம்; தரவுகள் திருடப்படவில்லை

wpengine

iPhone 6C ஸ்மார்ட் அடுத்தவருடம் அறிமுகம்

wpengine