ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எதிர்வரும் நாட்களில் மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின்சார சபைக்குள் நிலவி வரும் மாபியா நிலைமை காரணமாக எதிர்வரும் நாட்களில் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் அபாயம் நிலவுவதாக இலங்கை மின்சார சபையின் பொது ஊழியர் சங்கம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் நேற்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை மின்சார சபையின் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் மாலக்க விக்கிரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில்;

ஊழலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், சந்தர்ப்பவாத சங்கத்தினர் உள்ளிட்ட தரப்பினரை மின்சார சபை மாபியா என அழைக்கலாம் என குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபை சட்டமூலத்தின் 30வது சரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான நிகழ்ச்சி நிரலை இந்த அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் மாலக்க விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Related posts

மகிந்தவுக்காக அதிக விலையில் வாங்கப்பட்ட பெரிய வெங்காயம்!

wpengine

நிபந்தனையின் அடிப்படையில் கபீர் ஹாஷிம் இராஜினாமா….

wpengine

கைகலப்பில் மரிக்காருக்கு விழுந்தது அறை…

wpengine