உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் சில தினங்களில் காலநிலையில் மாற்றம்…



எதிர்வரும் சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் மழை வீழ்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த மாகாணங்களில் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, கடற்பகுதியில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோ மீற்றர் வரையிலான வேகத்தில் காணப்படும் எனவும் அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை கூட்ட முடியாது

wpengine

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

wpengine

துருக்கியிடமிருந்து இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி

wpengine