உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் ஒக்டோபர் முதல் இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகம்..



இலங்கையில் இலத்திரனியல் அடையாள அட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போதைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தும் போது போலியான அடையாள அட்டை, தகவல் குளறுபடிகள் என பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் இலத்திரனியல் அடையாள அட்டையை இலங்கையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முதற்கட்டமாக முதல் தடவையாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் காணாமல் போன அடையாள அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் குறித்த இந்த இலத்திரனியல் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இன்னும், தற்போதைக்கு அடையாள அட்டை வைத்துள்ள 16 மில்லியன் இலங்கையர்களுக்கும் கிராம சேவையாளர்கள் ஊடாக புதிய அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

நம்மில் நாம் தெளிவு காணாத வரை ஊழல் ஒழியாது! வீடு கையளிக்கும் நிகழ்வில் அஸ்மி யாசீன் தெரிவிப்பு..!

wpengine

சில பகுதிகளில் ஊரடங்கு தளர்வு

wpengine

இன்று 24 மணித்தியால நீர் வெட்டு

wpengine