Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் SLPP பெரும் வெற்றி பெரும் – பசில் நம்பிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் பெரும் வெற்றி பெற முடியும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மாவட்ட அளவில் கட்சி அமைப்பாளர்களை மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து கட்சி சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரிக்கு முன்னர் நடத்த வேண்டும் எனவும், இதில் பெரும் வெற்றியை பெற்றுக்கொள்ள அதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கட்சி உறுப்பினர்களுக்கு பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Related posts

தேரரின் தகாத உறவு, விகாரை மணியை ஒலிக்கச்செய்து ஊர்மக்களை விகாரைக்கு வரவழைப்பு..!

wpengine

‘கொழும்பு துறைமுக வளாகாத்தில் தீ’ குறித்த செய்தி பொய்யானது – அர்ஜுன

wpengine

இலங்கை அணியுடனான தொடரினை குறைக்க, மேற்கிந்தியத் தீவுகள் புதிய அட்டவணை…

wpengine