உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகருக்கு கடிதம்…



(FASTNEWS|COLOMBO) ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட  பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் இடம்பெறவுள்ள விவாதத்திற்கான நேரத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த தாக்குதல் காரணமாக சுற்றுலாத்துறை உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 5.30 முதல் 7.30 வரை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விவாதத்தை பிற்பகல் 1 மணி முதல் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த கடிதம் அனுப்பபட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு…

wpengine

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 21 ஆம் திகதி மீண்டும் திறப்பு…

wpengine

மட்டக்குளி கதிரானவத்த வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வு…

wpengine