Uncategorized

எதிர்க்கட்சிகள் நிறுவும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சூழ்ச்சித் திட்டங்கள் மூலம் எதிர்க்கட்சிகளினால் நிறுவப்படும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யாது என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாது என தெரிவித்துள்ளார்.

வேறும் விடயங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளை மேற்கொள்வோரினால் ஆட்சி செய்யப்படும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கத்திற்கு விசர் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

சிறு சிறு குழுக்கள் ஒன்றிணைந்து ஆட்சியை நிறுவுவதற்கு மக்கள் ஆணையளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு சிறு சிறு குழுக்கள் ஒன்றிணைந்து ஆட்சியை அமைப்பது ஜனநாயக விரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு மாநகரசபையின் மேயராக ட்ரோய் பல்தாசர் நியமிக்கப்படுவார் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்

Related posts

கேலிச் சித்திரம் 2015 06 19

wpengine

அவதானம்..! வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி

wpengine

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வு

wpengine