ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எதிர்கால ஜனாதிபதி, வேட்பாளர் தேர்தல் முடிந்து இரு தினங்களில் கைது செய்யப்படுவார்…



கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கிரில்லவெல பிரதேசத்தில் நேற்று(31) இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்திருந்தார்.

முன்னணி பத்திரிகையொன்றின் ஆசிரியர் ஒருவர் முதல் தடவையாக கொலை செய்யப்பட்டது கடந்த மஹிந்த ஆட்சியிலாகும். அவர் லசந்த விக்கிரமதுங்க. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரினால் கொள்வனவு செய்யப்பட்ட மிக் ரக யுத்த விமானத்தில் இடம்பெற்ற கொடுக்க வாங்கள் தொடர்பில் ஊடகத்தில் எழுதியதே இவரின் கொலைக்கு காரணமாகியது.

இது இராணுவத்திலிருந்து கொண்டு கோட்டபாய ராஜபக்ஷ விட்ட உத்தரவு. இன்று அவர் நாட்டில் இல்லை. அமெரிக்காவில் தப்பிச் சென்றுள்ளார். மலர் மொட்டு சின்னத்தின் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் அவர்தான். நாட்டிலில்லாத எதிர்கால ஜனாதிபதி, வேட்பாளர் தேர்தல் முடிந்து இரு தினங்கள் கழித்து எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டுக்கு வரவுள்ளார்.

இவர் தன்னைக் கைது செய்யும் எனப் பயந்து வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இருப்பினும், இவரைக் கைது செய்ய சகல நடவடிக்கைகளும் தயார். குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர் சிறையில் போடப்படுவார் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#g-reeshma..

Related posts

இந்த சிலைக்கு அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு!

wpengine

இலங்கை – நியூசிலாந்து நாளைய(14) போட்டி நிச்சயமற்றது

wpengine

OICஐ மோதிய சம்பவம் தொடர்பில் மஹிந்தானந்தவின் மகன் கைது…

wpengine