உலக செய்திகள்

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | மெக்ஸிக்கோ) – கிழக்கு மெக்ஸிகன் மாநிலமான வெராக்ரூஸின் மினாடிட்லான் நகரில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தீ விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாட்டின் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் சுற்றுச் சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாசரோ கார்டனாஸ் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமே புதன்கிழமை பிற்பகல் தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை படையினர் முன்னெடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தினால் இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இத்தாலி சிசிலி தீவில் மழை, வெள்ளத்துக்கு 12 பேர் உயிரிழப்பு…

wpengine

38 பேருடன் சென்ற சிலி நாட்டு விமானம் மாயம்

wpengine

23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 05 பேர் உயிரிழப்பு…

wpengine