உள்நாட்டு செய்திகள்

எட்கா உடன்படிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் கைச்சாத்திடப்படும்..?


இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான எட்கா உடன்படிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட உள்ளதாக இலங்கை அரசின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த உடன்படிக்கை இந்த வருட இறுதிக்குள் கைச்சாத்திடபடவுள்ளதாக முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தது, ஆனால் குறித்த இந்த உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதால் கைச்சாத்திடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அண்மையில் இந்தியாவின் வர்த்தகத் துறை இராஜாங்க அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இலங்கை வருகை தந்திருந்தார்.

எனினும் எட்கா உடன்படிக்கை தொடர்பிலான அடுத்த கட்ட பேச்சவார்த்தை இந்தியாவில் விரைவில் இடம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்து

wpengine

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

wpengine

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை 03 தினங்களுக்கு வரையறுக்க தீர்மானம்..

wpengine