ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எச்.ஐ.வீ அச்சத்தினால் மாணவனுக்கு பாடசாலை அனுமதி மறுப்பு


குளியாப்பிட்டிய பிரதேசத்தில் போலி எச்.ஐ.வீ அச்சம் காரணமாக பாடசாலை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தாம் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மற்றும் அதனை அண்டிய பாடசாலைகளில் தமது பிள்ளைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தாய் ஒருவர் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார். குளியாப்பிட்டி வலயக் கல்விப் பணிமனையின் எதிரில் குறித்த தாயும் மகனும் எதிர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்..தந்தை மூன்று மாதங்களுக்கு முன்னர் மரணித்தார். அவர் எயிட்ஸ் நோயினால் உயிரிழந்ததாக ஊரில் வதந்திகள் பரப்பியுள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.குறித்த மாணவருக்கு பாடசாலை ஒன்றை வழங்குமாறு கல்வி அமைச்சர் எழுத்து மூலம் குளியாப்பிட்டிய வலயக் கல்வி பணிமனைக்கு அறிவித்துள்ளார். கல்வி அமைச்சர் அறிவித்தும் பாடசாலை அனுமதி வழங்கவில்லை

Related posts

ஈழத் தமிழர் காலைகளை முறித்த காவல் அதிகாரி!

wpengine

இலங்கை பட்டிமன்றில் கலக்க வருகிறார் பாப்பையா…

wpengine

அரச ஊழியர்கள் இலஞ்சம் பெற்றால் ஏழு வருட சிறை

wpengine