Top Story 1உள்நாட்டு செய்திகள்

´எக்ஸ்பிரஸ் பேர்ள்´ குறித்து அரசு கவனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ´எக்ஸ்பிரஸ் பேர்ள்´ கப்பலில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்தக் கப்பலினால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பான இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்ள, அது பற்றி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றங்களைக் கண்டறிதல் போன்ற விடயங்கள் பற்றி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நேற்று (02) ஆராயப்பட்டது.

சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபை, ´நாரா´ நிறுவனம், கடற்படை உட்பட துறைசார் தரப்புகளின் ஆலோசனைகளும் இதன் போது வழங்கப்பட்டன. சேதமடைந்துள்ள கடல் பகுதியைச் சுத்தப்படுத்துவதற்கு கடற்றொழிலாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

ஜனாதிபதியுடன் கலந்துரையாட நாம் செல்வதில்லை – அநுர..

wpengine

ரஞ்சன் சில்வா கொலை தொடர்பில் ஒருவர் கைது…

wpengine

அர்ஜுன் அலோசியஸ், நான்காவது முறையாகவும் பிணை முறி ஆணைக்குழுவில் ஆஜர்..

wpengine