உள்நாட்டு செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ல் : கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பமாகியுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனம், இந்த பணிகளை வேறு இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தீ விபத்து காரணமாக இலங்கைக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை குறித்தும் திருமதி தர்ஷனி லஹந்தபுர விளக்கமளித்தார்.

“கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பெர்ல் கப்பலில் இருந்து கடற்பரப்பில் சிதறிக் கிடக்கும் கொள்கலன்களை அகற்ற கப்பலின் உரிமையாளரின் நிறுவனம் தற்போது இரண்டு நிறுவனங்களை நியமித்துள்ளது. அதன்படி, கடலுக்கு அடியில் சிதறி கிடக்கும் கொள்கலன்களை அகற்றும் பணியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளது. குறித்த அமெரிக்க நிறுவனம் தற்போதைய நிலையில் இலங்கை கடற்பரப்பில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. அதே நேரத்தில், ஷாங்காய் சால்வேஜ் நிறுவனத்திற்கு இடிபாடுகளை அகற்றும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது..”

Related posts

தனக்கு எதிரான வழக்கிற்கு வெளிநாட்டு பிரதிநிதிகளின் உதவியினை நாடவுள்ளேன் – திஸ்ஸ…

wpengine

ரயில் பிச்சைக்கு நவம்பர் முதல் தடை

wpengine

இவ் வருடம் முதல் ஒரு வகுப்பிற்கு 37 மாணவர்கள் மட்டு…

wpengine