உலக செய்திகள்

எகிப்திலுள்ள இத்தாலி தூதரகத்தின் மீது குண்டுத் தாக்குதல்



எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இத்தாலி தூதரகத்தின் மீது இன்று நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார். தூதரக கட்டிடத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.

மத்திய கெய்ரோவில் அமைந்துள்ள இந்த தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கார் குண்டு தாக்குதலாக இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு போலீசார் மற்றும் அவ்வழியாக சென்ற மூன்று பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான ஒருவர் தூதரக ஊழியரா? அல்லது, பொதுமக்களில் ஒருவரா? என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

(riz)

Related posts

புல்வாமா தாக்குதல் – அமெரிக்காவில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்…

wpengine

தகுதி அடிப்படையில் குடியுரிமை வழங்க டிரம்ப் வலியுறுத்தல்…

wpengine

தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி நிலையம்…

wpengine