உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊவா முதலமைச்சுப் பதவி ஐ.தே.க வசம்?



வெற்றிடமாகவுள்ள ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் பதவி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக, அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊவா முதலமைச்சராக இருந்த ஹரீன் பிரணாந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளதையடுத்து, குறித்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த பொதுத் தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்ற மாகாண சபை உறுப்பினர்களினால் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்ப, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கே இவ்வாறு புதிய நபர்கள் பெயரிடப்பட்டுள்ளன.

நேற்று(7) இவர்களை வர்த்தமானியில் பெயரிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அச்சகர் காமினி பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

(riz)

 

Related posts

அமைச்சுப் பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு இதுவொரு எச்சரிக்கை

wpengine

ரஞ்சனின் விடுதலைக்காக காத்திருக்கிறேன் : சஜித் பிரேமதாச

wpengine

நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது…

wpengine