உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண முதலமைச்சருக்கு மீளவும் கல்வி அமைச்சுப் பதவி வழங்கியமைக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு..



ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மாகாண கல்வி அமைச்சுப் பதவி மீண்டும் வழங்கப்பட்டமைக்கு, கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபருக்கு 2018.01.03 அவமரியாதை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஊவா மாகாண முதலமைச்சரிடம் இருந்து, மாகாண கல்வி அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டிருந்தது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் பல மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், இலங்கை மனித உரிமைகள ஆணைக்குழுவின் விசாரணைகள் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கன.

இந்நிலையில் மாகாண கல்வி அமைச்சுப் பதவியை மீண்டும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு வழங்கியமையானது மிகவும் பிரச்சினைக்குறிய விடயம் என்றும், விசாரணைகள் நிலுவையில் இருக்கும் போது பதவியில் அமர்த்தியமை குறித்தும் குறித்த சங்கம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

 

Rishma

Related posts

சொகுசு பேரூந்து விபத்தில் 18 பேர் வைத்தியசாலையில்

wpengine

பொதுபல உள்ளிட்ட அமைப்புக்கள் விக்னேஸ்வரனுக்கு எதிர்ப்பை தெரிவித்து நாளை வவுனியாவுக்கு..

wpengine

சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்புக் கோரிக்கை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம்..

wpengine