உள்நாட்டு செய்திகள்

ஊழியர்களின் வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்க நடவடிக்கை..



ஊழியர்களின் வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், தனியார் துறை ஊழியர்களின் பணி நேரத்தை 9 மணித்தியாலமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

தேசிய தொழிலாளர் பேரவையில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தொழில் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுடனும் எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பதவி விலகினாலும் அவன்ட் கார்ட் சர்ச்சைக்கு தீர்வு கிட்டவில்லை – மாரப்பன்ன

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 11 பேர் பூரண குணம்

wpengine

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்

wpengine