உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கை மீறுபவர்களைக் கைது செய்ய விசேட நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களைக் கைது செய்ய சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று நள்ளிரவுக்குப் பின்னர், அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மேல் மாகாணத்தில் உட்பிரவேசிக்கவோ அல்லது வெளியேறவோ அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் இந்த வாரத்தின் இறுதி நாட்கள் மிகவும் தீர்மானம் மிக்கவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை..

wpengine

பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க ஒரு மாதகால அவகாசம் ..

wpengine

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஓய்வு பெறுகிறார்

wpengine