உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 46 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடவத்தை, கம்பஹா, சீதுவ, கட்டுநாயக்க ஆகிய பகுதிகளிலேயே ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

மேலும், குறித்த காலப்பகுதியில் 07 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த 04 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 1,122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த காலப்பகுதியில் 163 வாகங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts

தலைக்கவச விவகாரம் – இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு.

wpengine

இஸ்ரேல் – பலஸ்தீன் மோதலை நிறுத்து, கிறிஸ்தவ இளைஞர்கள் மடடக்களப்பில் ஆர்ப்பாட்டம்..!

wpengine

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கியே தீருவார்”

wpengine